குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா!

கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்து வைத்தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவிற்கு தலைமை ஏற்றார். 



இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது. 



இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...